ரிஷாப் பண்ட் ஆடிய விதம் பற்றி அவரிடம் விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்


ரிஷாப் பண்ட் ஆடிய விதம் பற்றி அவரிடம் விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்
x
தினத்தந்தி 7 Jan 2022 9:15 AM GMT (Updated: 7 Jan 2022 9:32 AM GMT)

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இதில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது 

இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பண்ட் ஆடிய விதம்  விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரி‌ஷப்பண்ட் களம் இறங்கினார். அவருடன் ஹனுமா விஹாரி விளையாடினார் .

இந்நிலையில் ரி‌ஷப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் தவறான ஷாட் தேர்வினால் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து ஆட்டமிழந்தார் .அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது   ரிஷாப் பண்ட் அடித்து ஆட முயற்ச்சித்து அட்டமிழந்தது குறித்து விமர்சனம் எழுந்தது 

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது ;

 ரிஷாப் பண்ட்  ஆடிய விதம் பற்றி  விவாதிக்கப்படும் .அவருடன் சில உரையாடல்களை செய்ய போகிறோம். அவரது ஷாட் தேர்வு குறித்து விவாதிக்கப் போகிறோம். ரிஷாப் பண்ட் விளையாட்டின் போக்கை மிக விரைவில் மாற்றக்கூடியவர். அதை அவரிடமிருந்து பறித்து அவரை மிகவும் வித்தியாசமானதாக நீங்கள் ஆக்க மாட்டீர்கள் என்றார்.

Next Story