இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 9:48 AM GMT (Updated: 31 Jan 2022 9:48 AM GMT)

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

பொல்லார்ட்(கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹோசின், பிராண்டன் கிங், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட அணி வீரர்களே இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story