சர்வதேச கிரிக்கெட் தளம் வீரர்களை மெருகேற்றும் இடம் அல்ல - கவுதம் கம்பீர்


சர்வதேச கிரிக்கெட் தளம் வீரர்களை மெருகேற்றும் இடம் அல்ல - கவுதம் கம்பீர்
x
தினத்தந்தி 31 Jan 2022 9:30 PM IST (Updated: 31 Jan 2022 9:30 PM IST)
t-max-icont-min-icon

வீரர்களை மேம்படுத்த சர்வதேச தளம் இடம் அல்ல.உள்ளூர் போட்டிகளில் தான் அதனை செய்ய வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு மற்றும் வீரர்கள் தேர்வு செய்வது குறித்து பேசியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:-  

“இல்லாத ஒன்றை உருவாக்க முயன்றால் நடக்காது.சர்வதேச கிரிக்கெட் என்பது திறன்களை வெளிக்கட்ட வேண்டிய இடமே தவிர ஒரு தனி நபரை மெருகேற்றும் இடம் அல்ல.

வீரர்களை மேம்படுத்த சர்வதேச தளம்  இடம் அல்ல. உள்ளூர் போட்டிகளில் தான் அதனை செய்ய வேண்டும். 

கபில்தேவ்க்கு பின் ஒரு ஆல் ரவுண்டர் சரியாக இல்லை என தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கு பதிலாக ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தலாம். அவர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க கூடாது. விஜய் சங்கர், வெங்கடேஷ் ஐயர்,ஷிவம் டுபே போன்ற வீரர்களை பார்த்துவிட்டோம். இதனை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது”.

இவ்வாறு அவர் பேசினார்.
1 More update

Next Story