கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்!


கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்!
x
தினத்தந்தி 6 Feb 2022 10:07 AM GMT (Updated: 6 Feb 2022 10:07 AM GMT)

சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

காசியாபாத்,

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை  திரிலோகசந்த் ரெய்னா இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோகசந்த் ரெய்னா ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவருடைய பூர்வீக ஊர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி என்ற கிராமம் ஆகும்.

அவர் ராணுவ தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசியாபாத் நகரில் உள்ள இல்லத்தில் அவர் தங்கியிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

Next Story