சென்னை அணிக்கு மீண்டும் திரும்புகிறார் அம்பத்தி ராயுடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Feb 2022 11:12 AM GMT (Updated: 12 Feb 2022 11:12 AM GMT)

அம்பத்தி ராயுடுவை சென்னை அணி 6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

பெங்களூரு, 

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கிறது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கடந்த சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடுவை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அவரை சென்னை அணி  6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை அணி இதுவரை பிராவோ, ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடுவை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story