உலக கோப்பையில் மிதாலி ராஜ் புதிய சாதனை...!
உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற கேப்டன் என்ற சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.
ஹாமில்டன்,
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்களை எடுத்தது. அமெலியா கெர் 50 ரன்னும், எமி சாட்டர்வெய்ட் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 198 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.
முன்னதாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் ஆறு உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story