புதுச்சேரி அணி 201 ரன்கள் சேர்ப்பு

சி.கே. நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி 201 ரன்கள் குவித்தது.
நாடு முழுவதும் 25 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கான சி.கே. நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்இன்று நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் புதுச்சேரி அணியும், அசாம் அணியும் 4 நாட்கள் போட்டியாக விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற புதுச்சேரி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் முடிவில் பாண்டிச்சேரி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. நேயன் காங்கேயன் 138 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார். நாளை (புதன்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
புதுவையில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு, மும்பை, ஆந்திரா, மணிப்பூர் ஆகிய மாநில அணிகள் விளையாடி வருகின்றன.
------
Related Tags :
Next Story