ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த பாபர் ஆசம்


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த   பாபர் ஆசம்
x
தினத்தந்தி 1 April 2022 9:36 AM GMT (Updated: 1 April 2022 9:36 AM GMT)

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் புதிய சாதனையை படைத்தார்.

லாகூர்,

பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 348 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் இமாம் உல் ஹாக் மற்றும் கேப்டன் பாபர் ஆசமின் அபார சதத்தின் உதவியுடன் 49 ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது. . 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 83 பந்தில் 114 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார், அத்துடன், தனது 15-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அதிவேகமமன 15 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பாபர் ஆசம் படைத்தார்.  இதற்கு முன்பு ஹாசிம் அம்லா 86 இன்னிங்சில் 15 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story