2024 டி20 உலகக்கோப்பை; பாண்ட்யாவா...துபேவா...இருவரில் யார் விளையாட வேண்டும் - இந்திய முன்னாள் வீரர் கருத்து


2024 டி20 உலகக்கோப்பை; பாண்ட்யாவா...துபேவா...இருவரில் யார் விளையாட வேண்டும் - இந்திய முன்னாள் வீரர் கருத்து
x

Image Courtesy: @BCCi / twitter

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் துபே தொடர் நாயகன் விருதை வென்றார்.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அதன்படி தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நமீபியா அணிகளும், குரூப் சி-யில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா,பாப்புவா நியூ கினியா அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து 2024 டி20 உலகக்கோப்பையில் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையுமே தேர்வு செய்யலாம் என இந்திய முன்னாள் வீரர் ஜாஹீர் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இது உங்களுக்கு 6வது பந்துவீச்சாளர் வேண்டுமா அல்லது 5 பந்துவீச்சாளர்கள் போதுமா என்பதை பொறுத்து அமையும். இதில் நீங்கள் எந்த வழியில் செல்கிறீர்களோ அதை பொறுத்து முடிவெடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு 6வது பந்துவீச்சாளர் தேவையென்று நினைத்தால் அதற்கான பேக்-அப் அவசியமாகும்.

அது போன்ற சூழ்நிலையில் 2 விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையும் உலகக்கோப்பையில் தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story