2வது ஒருநாள் போட்டி : நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி


2வது ஒருநாள் போட்டி : நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
x

இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

ஆம்ஸ்டெல்வீன்,

நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மழை குறிக்கிட்ட்டதால் போட்டி சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது .இதனால் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது . டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து 41 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 235 ரன்கள் எடுத்தது .அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் எடுத்தார் .

தொடர்ந்து 236 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 36.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 73 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்போட்டி தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது

1 More update

Next Story