2வது ஒருநாள் போட்டி: கிங், சார்லஸ் அரைசதம்...யுஏஇ-க்கு 307 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட்இண்டீஸ்...!


2வது ஒருநாள் போட்டி: கிங், சார்லஸ் அரைசதம்...யுஏஇ-க்கு 307 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட்இண்டீஸ்...!
x

Image Courtesy:AFP

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

ஷார்ஜா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய பிர்ண்டன் கிங் மற்றும் சார்லஸ் அருமையாம தொடக்க அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் பிரண்டன் கிங் 64 ரன்னும், சார்லஸ் 63 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய புரூக்ஸ் 20 ரன், கார்டி 32 ரன், சேஸ் 7 ரன், ஹோப் 23 ரன், ஹாட்ஜ் 26 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் அந்த அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்கள் குவித்தது. யுஏஇ அணி தரப்பில் ஜாகூர் கான் 3 விக்கெட்டும், அலி நசீர், சன்சித் சர்மா, அப்சல் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி ஆட உள்ளது.


Next Story