2வது டி20 போட்டி; ஹாரி டெக்டர் அபாரம்...ஜிம்பாப்வேயை வீழ்த்திய அயர்லாந்து...!


2வது டி20 போட்டி; ஹாரி டெக்டர் அபாரம்...ஜிம்பாப்வேயை வீழ்த்திய அயர்லாந்து...!
x

image courtesy: @cricketireland

அயர்லாந்து அணி தரப்பில் ஹாரி டெக்டர் 48 ரன்கள் அடித்தார்.

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 7ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பர்ல் 38 ரன்னும், கிளைவ் மடாண்டே 44 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பால்பிர்னி 8 ரன், ஸ்டிர்லிங் 10 ரன், அடுத்து களம் இறங்கிய லோர்கன் டக்கர் 12 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து ஹாரி டெக்டர் மற்றும் கர்டிஸ் கேம்பர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் கேம்பர் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து டெக்டருடன் டாக்ரெல் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெக்டர் 48 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க் அடெய்ர் களம் இறங்கினார்.

இறுதியில் அயர்லாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.


Next Story