2வது டி20போட்டி; இந்திய பிளேயிங் லெவனில் இந்த இரு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் - சுரேஷ் ரெய்னா


2வது டி20போட்டி; இந்திய பிளேயிங் லெவனில் இந்த இரு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் - சுரேஷ் ரெய்னா
x

கோப்புப்படம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

இந்தூர்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இரண்டாவது டி20 போட்டியில் விராட் கோலி நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம் அளவில் சிறிய மைதானம். எனவே தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பினை வழங்க வேண்டும்.

மேலும், இந்த போட்டியில் ஷிவம் துபே நான்கு ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று. எனவே சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story