2வது டி20 போட்டி: டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு...!


2வது டி20 போட்டி: டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு...!
x

Image Courtesy: @BCCI

இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

டப்ளின்,

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story