இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு..!
தொடர்ந்து அதே நிலை நீடித்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் 48 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இலங்கை கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர் டாம் லாதம் 21 ரன்னில் அவுட் ஆனார்.
மற்றொரு தொடக்க வீரர் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அரைசதம் எடுத்தார். 78 ரன்கள் எடுத்த அவர் ஆட்டம் இழந்தார். 48 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து இருந்தது. அப்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதே நிலை நீடித்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் 48 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story