இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு


இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

தொடரை சமன் செய்ய இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது. அதேவேளையில் போட்டியை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால் , சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா , முகேஷ் குமார், சிராஜ் .

தென் ஆப்பிரிக்க அணி :டீன் எல்கர் (கேப்டன் ), நந்த்ரே பர்கர், பெடிங்காம், டோனி டி ஜோர்ஸி, மார்கோ யான்சன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், , லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , கைல் வெர்ரைன்.


Next Story