தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: காயம் காரணமாக கேமரூன் கிரீன் விலகல்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: காயம் காரணமாக கேமரூன் கிரீன் விலகல்
x

Image Courtesy: AFP

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில்நடந்து வருகிறது.

டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்த டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வார்னருக்கு 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. அந்த அணி தரப்பில் வெரைன் 52 ரன், ஜேன்சன் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஸ்டீஸ் ஸ்மித் 85 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 111 ரன்கள் அடித்தார். தற்போது களத்தில் கேமரூன் க்ரீன் மற்றும் ஸ்டார்க் உள்ளனர்.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய கேனரூன் கிரீனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச மாட்டார் என்றும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சிட்னியில் நடைபெறும் 3வது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story