4வது டி20 போட்டி; மிட்செல் - பிலிப்ஸ் அபார ஆட்டம்...பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து..!


4வது டி20 போட்டி; மிட்செல் - பிலிப்ஸ் அபார ஆட்டம்...பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து..!
x

Image Courtesy: AFP

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

கிறிஸ்ட்சர்ச்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி ரிஸ்வானின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் 90 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆலென் 8 ரன்னிலும், செய்பர்ட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வில் யங்கும் 4 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் இணை பொறுப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்து சென்றது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தனர். 18.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் 72 ரன், பிலிப்ஸ் 70 ரன் எடுத்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.


Next Story