நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும் - அஸ்வின்


நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும் - அஸ்வின்
x

நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

சென்னை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை மாற்ற வேண்டும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாவது:-

டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும். ஒரே ஒரு பந்தில் தோற்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் வெற்றி பெறலாம். இதனை விட முக்கியமான ஒன்று பவர் ப்ளே. நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது.

ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story