இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் நடிகர் ரஜினிகாந்த்


இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் நடிகர் ரஜினிகாந்த்
x

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசிக்கிறார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசிக்கிறார்.

மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் காண்கிறார்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


Next Story