கேரளா கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.
மேலும், கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Related Tags :
Next Story