சக வீரருக்கு முத்தமிட்ட ஆடம் ஜாம்பா - 'பிக் பாஷ் லீக்' தெரிவித்த காதலர் தின வாழ்த்து...!


சக வீரருக்கு முத்தமிட்ட ஆடம் ஜாம்பா - பிக் பாஷ் லீக் தெரிவித்த காதலர் தின வாழ்த்து...!
x

Image Courtesy: @BBL

‘பிக் பாஷ் லீக்’ தனது டுவிட்டர் பக்கத்தில் வித்தியாசமாக காதலர் தின வாழ்த்து கூறியுள்ளது.

மெல்போர்ன்,

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அன்புக்குரியவர்களைக் கவுரவிப்பதற்கும் அவர்களை சிறப்புற உணர வைப்பதற்கும் ஒரு நாள். பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஒருவருக்கு ஒருவர் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா சக நாட்டு வீரர் ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் டுவிட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான எமோஜியுடன் தலைப்பிட்டுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.



1 More update

Next Story