லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு...!


லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு...!
x

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

லக்னோ,

இந்தியாவில் நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறி அசத்தி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டன.

இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் புள்ளி பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ளும். அதே வேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மங்கிவிடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story