76 ரன்னுக்கு ஆல்அவுட்! மோசமான சாதனையில் கென்யாவோடு இணைந்த இலங்கை அணி


76 ரன்னுக்கு ஆல்அவுட்! மோசமான சாதனையில் கென்யாவோடு இணைந்த இலங்கை அணி
x

ஒருநாள் போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் 100-க்கும் குறைவான ரன்களை இலங்கை அணி எடுத்துள்ளது.

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து 198 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் 100-க்கும் குறைவான ரன்களை எடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளது. அந்த அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 73, 78 என ரன்களை எடுத்திருந்தது.

கடந்த 2013ல் கென்யா அணி தொடர்ந்து இரு போட்டிகளில் 89, 93 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்த பட்டியலில் கென்யாவுடன் இலங்கையும் இணைந்துள்ளது.

1 More update

Next Story