பும்ரா போல் பந்துவீசி அசத்தும் இளம் பெண்... வைரல் வீடியோ


பும்ரா போல் பந்துவீசி அசத்தும் இளம் பெண்... வைரல் வீடியோ
x
தினத்தந்தி 18 Aug 2024 3:15 AM IST (Updated: 18 Aug 2024 3:15 AM IST)
t-max-icont-min-icon

இளம்பென் ஒருவர் பும்ரா போல் பந்து வீசும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் பும்ரா ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பும்ராவை போல் ஒடிவரும் அவர், பந்தை ரிலீஸ் செய்வதும் பும்ரா மாதிரியே உள்ளது.

1 More update

Next Story