ஆஷஸ் 3-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு


ஆஷஸ் 3-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy : ICC 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

ஹெட்டிங்லே,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காம் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story