ஆஷஸ் 5வது டெஸ்ட் : இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது


ஆஷஸ் 5வது டெஸ்ட் :  இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
x

Image Tweet BY ICC

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

லண்டன்,

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை விளையாடியது.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , கவாஜா களமிறங்கினர், டேவிட் வார்னர் 24 ரன்களுக்கு வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரலிய அணியின் கவாஜா 26 ரன்களும் , லபுசேன் 2 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.


Next Story