ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து..!


ஆசிய கோப்பை:  இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்  மழையால் ரத்து..!
x
தினத்தந்தி 2 Sept 2023 10:09 PM IST (Updated: 3 Sept 2023 2:26 PM IST)
t-max-icont-min-icon

மழையால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பல்லகெலே,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் மோதின .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ரோகித் சர்மா 11 ரன்களில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடித்து வந்த விராட் கோலி 4 ரன்களுக்கு , ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் கில் 10 ரன்களில் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து இஷான் கிஷான் , ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இஷான் கிஷான் 54 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார்.சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் 82 ரன்கள் , ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.அடுத்து களமிறங்கிய ஜடேஜா பந்துவீச்சில் 14 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட் , ஹாரிப் ரவுப் 3 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் 48.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 266ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட் , ஹாரிப் ரவுப், நசீம் ஷா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 267ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஏற்கனவே முதல் போட்டியில் நேபாளம் அணியை வீழ்த்தியதால் பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தியா வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ள நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story