ஆசிய கோப்பை : பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு..! வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தொடரிலிருந்து விலகல்


ஆசிய கோப்பை : பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு..! வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தொடரிலிருந்து விலகல்
x

Image Courtesy : AFP 

பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் ஷாஹீன் அப்ரிடி விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்த போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் ஷாஹீன் அப்ரிடி விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.ஆசியக் கோப்பைக்கான அணியில் அப்ரிடிக்கு மாற்று வீரரை பாகிஸ்தான் இன்னும் அறிவிக்கவில்லை.



Next Story