ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மலேசியா பந்துவீச்சு தேர்வு


ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மலேசியா பந்துவீச்சு தேர்வு
x

image courtesy: Malaysia Cricket twitter

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.

அந்த வகையில் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, மலேசியா அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story