உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்த 4 அணிகள் நுழையும் - ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணிப்பு


உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்த 4 அணிகள் நுழையும் - ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2023 5:49 AM IST (Updated: 5 Aug 2023 2:02 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழையும் 4 அணிகள் எவை? என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்துள்ளார்.

சிட்னி,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பையை வெல்ல பல்வேறு அணிகள் தற்போதே தங்கள் பயிற்சியை தொடங்கிவிட்டன. அதேபோல், முன்னாள் வீரர்கள் பலரும் உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? என்பது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், உலகக்கோப்பையில் அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணிகள் எவை? என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளேன் மெக்ராத் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு இடம் இருக்கும். இந்தியா தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. இங்கிலாந்து கடந்த சில மாதங்களாக சிறப்பாக ஆடி வருகிறது. பாகிஸ்தானும் சிறப்பாக ஆடி வருகிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையலாம்' என்றார்.


Next Story