டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா..!


டெஸ்ட் சாம்பியன்ஷிப்  பட்டம் வெல்ல  இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா..!
x

இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3-வது நாள் அட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதை எடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் கவாஜா(13) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த நிலையில் இந்த முறை 18 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடினார். அவருடன் இனைந்து ஸ்டார்க் சிறப்பாக விளையாடினார்.

அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் ஸ்டார்க் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கம்மின்ஸ் 5ரன்களில் ஆட்டமிழந்தார்.

8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்த்து. இதனால் இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story