வார்னர், மேக்ஸ்வெல் சதம்: நெதர்லாந்துக்கு 400 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா


வார்னர், மேக்ஸ்வெல் சதம்: நெதர்லாந்துக்கு 400 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
x

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்துள்ளது.

டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 24வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, டேவிட் வார்னர், மார்ஷ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

மார்ஷ் 9 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்புடன் ஆடிய ஸ்மித் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த லபுஷேன் 62 ரன்னிலும், ஜோஷ் 14 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 93 பந்தில் 104 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

அடுத்துவந்த மேக்ஸ்வெல் நெதர்லாந்து பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். அவர் 40 பந்துகளில் சதம் விளாசினார். இறுதியில் 44 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய மேக்ஸ்வெல் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது.


Next Story