ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியது ஆஸ்திரேலியா..!


ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியது ஆஸ்திரேலியா..!
x

ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் மாதம் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலியா நேற்று பின்வாங்கியது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் அரசு பெண்களின் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.


Next Story