ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்த பாபர் ஆசம் - வீடியோ...!


ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்த பாபர் ஆசம் - வீடியோ...!
x

Image Courtesy: Instagram - afghanistancricketboard / icc

தினத்தந்தி 24 Oct 2023 4:02 AM GMT (Updated: 25 Oct 2023 5:20 AM GMT)

ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு பாபர் ஆசம் தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று. வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்கள் குவித்தது. இதையடுத்து 283 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story