இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம்!
இந்த ஒப்பந்தம் வரவிருக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), இந்தியாவில் நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை இன்று ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது.
அதன்படி நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் வரவிருக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
Related Tags :
Next Story