உலகின் மிகப்பெரிய "ஜெர்சியை" அறிமுகம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பிசிசிஐ


உலகின் மிகப்பெரிய ஜெர்சியை அறிமுகம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பிசிசிஐ
x

Image Courtesy : Screengrab Twitter @IPL 

பிசிசிஐ உலகின் மிகப்பெரிய ஜெர்சியை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்றுள்ளது.

அகமதாபாத்,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. அதற்கு முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் நிறைவு விழாவில் பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த போட்டியை காண மைதானத்திற்கு வந்துள்ளனர். ஐபிஎல் நிறைவு விழாவில் உலகின் மிகப்பெரிய ஜெர்சியை உருவாக்கி பிசிசிஐ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்றுள்ளது.

அகமதாபாத்தில் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவின் போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ஆகியோர் கின்னஸ் சாதனை மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

1 More update

Next Story