என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் பேட்டிங்...- மேக்ஸ்வெல்லை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்...!


என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் பேட்டிங்...- மேக்ஸ்வெல்லை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 8 Nov 2023 7:27 AM IST (Updated: 8 Nov 2023 8:50 AM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மும்பை,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 291 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் இப்ராகிம் ஜட்ரான் சதம் (129 ரன்) அடித்து அசத்தினார்.

இதையடுத்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் இரட்டை சதம் (201 ரன்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை பாராட்டி உள்ள இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

ஆப்கானிஸ்தான் சார்பாக இப்ராகிம் ஜாட்ரான் மிகச் சிறப்பாக விளையாடி அந்த அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 70 ஓவர்கள் வரை மிகச் சிறப்பாக விளையாடி இருந்தும் கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல் அனைத்தையும் மாற்றிவிட்டார்.

ஒரு அழுத்தமான சூழ்நிலையில் அவர் விளையாடிய ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. அவரது இந்த பேட்டிங்தான் நான் வாழ்நாளில் பார்த்த மிகச் சிறப்பான ஒருநாள் பேட்டிங் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story