சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்கிறோம் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
ஐதராபாத்தில் கடந்த ஒரு வாரமாக இருக்கிறோம், ஆனால் சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்கிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
கேப்டன்கள் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'இந்தியாவில் எங்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தகைய விருந்தோம்பலை எதிர்பார்க்கவில்லை. ஐதராபாத்தில் கடந்த ஒரு வாரமாக இருக்கிறோம். ஆனால் நாங்கள் இந்தியாவில் இருப்பது போல் இல்லை. சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்.
அணியில் உள்ள அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை வழங்க இது பொன்னான நேரமாகும். இங்குள்ள மைதானங்களில் பவுண்டரி தூரம் குறைவாக இருக்கும். பவுலர்கள் கொஞ்சம் தடுமாறினாலும் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே இது அதிக ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும்.
ஐதராபாத் பிரியாணி சூப்பர். கராச்சி பிரியாணியுடன் ஒப்பிடும் போது இதில் சற்று காரம் அதிகம்' என்றார்.
Related Tags :
Next Story