3-வது டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா...!


3-வது டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா...!
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

டெல்லி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொரில் கடந்த 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். ஆனால், குடும்ப விவகாரம் தொடர்பாக பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா சென்றார். 3-வது டெஸ்ட் தொடங்குவதற்குள் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார் என்று முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட்டில் களமிறங்க உள்ளது.


Next Story