புச்சிபாபு கிரிக்கெட்: பெங்கால் அணி 193 ரன்னில் சுருண்டது


புச்சிபாபு கிரிக்கெட்: பெங்கால் அணி 193 ரன்னில் சுருண்டது
x

புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

நெல்லை,

12 அணிகள் இடையிலான புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் 3-வது சுற்று நேற்று தொடங்கியது. தமிழ்நாடு கிரிக்கெட் தலைவர் லெவன்- சத்தீஷ்கார் (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் நடக்கிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஷ்கார் முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 270 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷசாங் சிங் 56 ரன் எடுத்தார். தமிழகம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜித் ராம் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக தலைவர் லெவன் அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்துள்ளது.

நெல்லையில் தொடங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவனுக்கு எதிரான (டி பிரிவு) ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்கால் 57.2 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

1 More update

Next Story