விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என என் இதயம் விரும்புகிறது - சோயிப் அக்தர்


விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என என் இதயம் விரும்புகிறது - சோயிப் அக்தர்
x

Image Courtesy : BCCI / IPL 

கோலி சதம் அடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச போட்டிகளில் கோலி சதம் அடித்து 2 வருடங்கள் கடந்து விட்டது. இந்த 2 வருடங்களாக அவர் பலமுறை அரைசதத்தை கடந்து இருந்தாலும் சதம் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு கைகூடவில்லை.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரிலும் தொடக்கத்தில் அவரின் ஆட்டம் மோசமாக இருந்தது. பெங்களூரு அணியின் கடைசி லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் அணியை வெற்றி பெற செய்தார். அவரின் இந்த அதிரடி பேட்டிங் தொடர வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பம்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் , கோலி சதம் அடிக்க வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு முன் கோலி குறித்து அவர் கூறுகையில், "விராட் கோலி நவீன காலத்தின் மிகச்சிறந்த வீரர். அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் அவரை தேவையில்லாமல் கிண்டல் செய்கிறார்கள்.

நான் விராட் கோலியுடன் இருக்கிறேன். விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது. விராட் மேலும் வீழ்ச்சியடைவதை என்னால் பார்க்க முடியவில்லை. அவரிடமிருந்து மேட்ச் வின்னிங் சதத்தை எதிர்பார்க்கிறேன். அவரை மகிழ்ச்சியாக பார்க்க விரும்புகிறேன்" என அக்தர் தெரிவித்தார்.

1 More update

Next Story