சிறப்பாக பந்துவீசி டெல்லி அணியை வெற்றி பெற செய்த இஷாந்த் ஷர்மாவுக்கு கேப்டன் டேவிட் வார்னர் பாராட்டு


சிறப்பாக பந்துவீசி டெல்லி அணியை வெற்றி பெற செய்த இஷாந்த் ஷர்மாவுக்கு கேப்டன் டேவிட் வார்னர் பாராட்டு
x

Image Courtesy : Delhi Capitals Twitter 

கடைசி ஓவரை சிறப்பாக வீசிய இஷாந்த் ஷர்மாவுக்கு கேப்டன் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார் .

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது

.இப்போட்டியில் முதலில் பேட் செய்ய டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமன் ஹக்கீம் கான், 51 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 131 ரன்கள் இலக்கோடு குஜராத் அணி களமிறங்கிய நிலையில், அந்த அணியின் பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார்.கடைசி 12 பந்துகளில் குஜராத் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நோர்கியா பந்துவீச்சில் ராகுல் தெவாட்டியா ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார்.இதனால் கடைசி ஒவரில் வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து தெவாட்டியா விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய இஷாந்த் ஷர்மாவுக்கு கேப்டன் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார் .

அவர் கூறியதாவது ,

இஷாந்த் ஷர்மா என்றென்றும் இளமையாகிறார். அவரை பார்க்க அற்புதமாக இருக்கிறது.கடைசியில் அவர் பெரிய அழுத்தத்தை கையாண்டார். வாழ்த்துக்கள்.திவாட்டியா சிக்ஸர்கள் அடிக்கும்போது நான் பதட்டமாக இருந்தேன்.கடைசி ஓவர்களில் எங்களின் சிறந்த பவுலர் அன்ரிச் தான். அதனால் நான் பந்தை அவருக்கு கொடுத்தேன் .

பின்னர் இஷாந்த் எதைச் செயல்படுத்த விரும்பினார் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார், அவரால் அதைச் செய்ய முடிந்தது" என கூறினார்.


Next Story