ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு...!


ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு...!
x

Image Courtesy: @ChennaiIPL

தினத்தந்தி 12 April 2023 1:35 PM GMT (Updated: 12 April 2023 1:48 PM GMT)

இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.

சென்னை,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன்.

ஐபிஎல் தொடரின் இன்றைய 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னையில் மோத உள்ளன. சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு இந்த ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.

199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தோனிக்கு பரிசளிப்போம் என்று சி.எஸ்.கே. அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

வீரர்கள் விவரம்:-

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மையர், துருவ் ஷோரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, சிசண்டா மகலா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.


Next Story