டி.என்.பி.எல்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 114 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேலம்


டி.என்.பி.எல்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 114 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேலம்
x
தினத்தந்தி 19 July 2022 3:37 PM GMT (Updated: 19 July 2022 5:47 PM GMT)

முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை எடுத்துள்ளது.

சேலம்,

8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

2 நாள் ஓய்வை தொடர்ந்து இன்று சேலம் மைதானத்தில் நடைபெற்று வரும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய சேலம் அணி சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துவக்க ஆட்டக்காரர் கோபிநாத்தை (42 ரன்கள்) தவிர பிற முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை சேலம் அணி எடுத்துள்ளது. இதன் மூலம் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.


Next Story