ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி: இந்திய கிரிக்கெட் வீரர்களின் போராட்ட குணம், துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் - சுரேஷ் ரெய்னா


ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி: இந்திய கிரிக்கெட் வீரர்களின் போராட்ட குணம், துணிச்சலுக்கு  தலை வணங்குகிறேன் - சுரேஷ் ரெய்னா
x

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு வீரரும் வெளிபடுத்திய போராட்ட குணம், துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் என முன்னள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. மெல்போர்ன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா டுவிட்டர் பதிவில்,

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். நீங்கள் தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள், ஒவ்வொரு வீரரும் வெளிபடுத்திய போராட்ட குணத்திற்கும்,துணிச்சலுக்கும் தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story