உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு அஸ்வின் வாழ்த்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அஸ்வின் கூறியிருப்பதாவது:- கடந்த 2 ஆண்டு கடும் உழைப்பு தோல்வியில் முடிந்தது ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து குழப்பங்களுக்கு மத்தியிலும் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்களை பாராட்ட வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சளரான அஸ்வின் சேர்க்கப்படாதது விமர்சனத்திற்கு வித்திட்டது. ஆடுகளத்தின் தன்மை கருதி அஸ்வின் சேர்க்கப்படவில்லை என அணி நிர்வாகம் கூறியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
Related Tags :
Next Story