கான்வே அதிரடி அரைசதம் ..! ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அசத்தல் வெற்றி


கான்வே அதிரடி அரைசதம் ..! ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அசத்தல் வெற்றி
x

இதனால் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 4வது வெற்றியை பெற்றது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொண்டது

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக ஹார்ரி புரூக் , அபிஷேக் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அபிஷேக் சர்மா , திரிபாதி இணைந்து சிறப்பாக விளையாடினார்.

தொடர்ந்து ஆடிய அபிஷேக் சர்மா 34 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் திரிபாதி 21ரன்களும் , கேப்டன் மார்க்ரம் 12ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து சென்னை அணி சிறப்பாக பந்துவீசியதால் மயங்க் அகர்வால் 2 ரன்களும் , ஹென்றிச் கிளாசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 134ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , ஆகாஷ் சிங், பதிரனா , தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 135 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , டேவான் கான்வே களமிறங்கினர்.

தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர்.அதிரடி காட்டிய இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். மார்கோ ஜான்சன் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரி , ஒரு சிக்ஸர் பறக்க விட்டு 22 ரன்கள் விளாசினார் கான்வே.

அதிரடியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த கான்வே 34பந்துகளில் அரைசதம் அடித்தார்.மறுபுறம் அணியின் ஸ்கோர் 87ரன்னாக இருந்த போது 35 ரன்களில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட் ஆனார்.தொடர்ந்து ரஹானே 9 ரன்களும் , ராயுடு 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் கான்வே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார்.

இறுதியில் 18.4ஓவர்களில்3 விக்கெட் இழப்புக்கு 138ரன்கள் எடுத்து 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆட்டமிக்காமல் , களத்தில் இருந்த கான்வே 57பந்துகளில் 77ரன்கள் குவித்தார்.

இதனால் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 4வது வெற்றியை பெற்றது.


Next Story