இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? எங்களது ஆட்டத்தை மற்ற அணியினர் அலசி ஆராய்வார்கள் - நியூசிலாந்து வீரர் கான்வே
இங்கிலாந்தை நாங்கள் எப்படி வீழ்த்தினோம் என்பதை அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப மற்ற அணிகள் தங்களது வியூகங்களை வகுப்பார்கள் என்று நியூசிலாந்து வீரர் கான்வே கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து பிரமிக்க வைத்தது. டிவான் கான்வே (152 ரன்), ரச்சின் ரவீந்திரா (123 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் கான்வே நிருபர்களிடம் கூறுகையில், 'இனி மற்ற அணிகள் இங்கிலாந்தை சந்திக்கும் போது அவர்களை நாங்கள் எப்படி வீழ்த்தினோம் என்பதை அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப தங்களது வியூகங்களை வகுப்பார்கள் என்று நினைக்கிறேன். என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் பேட்டிங்குக்கு உகந்த சூழலில் விளையாடும் வாய்ப்பை பெற்றோம். மின்னொளியில் ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது. அதை பயன்படுத்திக் கொண்டோம்' என்றார்.
Related Tags :
Next Story