ஒரே ஓவரில் 'டபுள் ஹாட்ரிக்' எடுத்து ஜூனியர் வீரர் சாதனை


ஒரே ஓவரில் டபுள் ஹாட்ரிக் எடுத்து ஜூனியர் வீரர் சாதனை
x
தினத்தந்தி 17 Jun 2023 2:04 PM IST (Updated: 17 Jun 2023 2:11 PM IST)
t-max-icont-min-icon

மகனின் விளையாட்டை பார்க்க அமர்ந்து இருந்த தாய் பிப்பா மகனின் இரட்டை ஹாட்ரிக் சாதனையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

லண்டன்:

கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளிலும் ஒரு பந்து வீச்சாளர் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பது அரிது . ஆனால் 12 வயது ஜூனியர் வீரர் ஆலிவர் ஒயிட்ஹவுஸ் புரோம்ஸ்கிரோவ் கிளப்பிற்காக வியக்க வைக்கும் வகையில் ஒரே ஒவரில் 'டபுள் ஹாட்ரிக்' சாதனை படைத்து உள்ளார்.

ஒயிட்ஹவுஸ், குக்ஹில் கிளப்புக்கு எதிராக புரோம்ஸ்கிரோவ் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடினார். அப்போது ஒரே ஓவரில் 6 பேரை அவுட்டாக்கி 'டபுள் ஹாட்ரிக்' சாதனை படைத்து உள்ளார்.மொத்தம் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

ஒயிட்ஹவுஸ், தாய்வழி பாட்டி 1969 விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியனான ஆன் ஜோன்ஸ் என்பதால் அவரது விளையாட்டுத் திறமை ஆச்சரியப்படுவதற்கில்லை.


Next Story